
3 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மகிமா நம்பியார்
படத்தின் பணிகள் முடிந்து தணிக்கை செய்யப்பட்டு "யுஏ" சான்றிதழ் பெற்றுள்ளது. கடலோர மக்களின் வாழ்க்கை, பாரம்பரியம், உணர்வுகள், அவர்களின் மன உறுதியை மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமாவாக உருவாகி இருக்கும் இந்த படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கி இருக்கிறார்.
ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையில் எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில் படம் தயாராகியுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!