50 கோடி கிளப்பில் இணைந்த மஹாராஜா
ஜூன் 21, 2024
Advertisement
விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றது. "குரங்கு பொம்மை" படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கியுள்ள இந்த படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ளனர். இதில், அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ், அபிராமி, முனிஸ் காந்த், சிங்கம்புலி, பாரதிராஜா, வினோத் சாகர், ஏ.எல் தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படம் கடந்த 14ம் தேதி வெளியானது. படத்தின் வெற்றிக் கொண்ட்டாட்டத்தை படக்குழுவினர் கடந்த 19ம் தேதி கொண்டாடினர். இந்நிலையில் படத்தின் வசூல் குறித்து படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கடைசியாக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி படம் வெளியான ஒரு வாரத்தில் 55 கோடியே 8 லட்சம் வசூலித்துள்ளதாக அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது. இதன் மூலம் மஹாராஜா 50 கோடி கிளப்பில் இணைந்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…