
அமெரிக்க திரைப்பட விழாவில் மஹாராஜா
ஜூன் 29, 2024
Advertisement
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸில், லாஸ் ஏஞ்சல்ஸ் இந்திய திரைப்பட விழா கடந்த 27ம் தேதி தொடங்கியது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த விழாவில் இறுதிநாளான நாளை விஜய் சேதுபதி நடித்த அவரது 50வது படமான "மஹாராஜா" திரையிடப்படுகிறது. இதில் விஜய் சேதுபதியுடன் மம்தாமோகன் தாஸ், நட்டி நட்ராஜ், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள், நித்திலன் சாமிநாதன் இயக்கி இருந்தார். இதேபோல சமீபத்தில் மலையாளத்தில் கிறிஸ்டோடாமி இயக்கத்தில் வெளியான "உள்ளொழுக்கு" என்ற படமும் திரையிடப்படுகிறது. இதில் பார்வதி திருவோத்து, ஊர்வசி ஆகியோர் நடித்திருந்தார்கள். லாஸ் ஏஞ்சல்ஸில் திரையிடப்படுகிறது. இவ்விழாவில் பார்வதி கலந்து கொள்கிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!