மா இன்ட்டி பங்காரம் ஜூலை 17ல் ஓடிடியில் ரிலீஸ்
ஜூலை 13, 2026
Advertisement
நந்தினி ரெட்டி இயக்கத்தில், சமந்தா நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்துள்ள படம் ‛மா இன்ட்டி பங்காரம்". இப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபீஸில் 100 கோடி ரூபாய் வசூல் என்ற பிரம்மாண்ட மைல் கல்லை எட்டியுள்ளது. இந்த அதிரடி சாதனையைத் தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளர்கள் இப்படத்தின் டிஜிட்டல் ஓடிடி ஸ்ட்ரீமிங் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமத்தை பிரபல ஓடிடி தளமான ஜியோ ஹாட் ஸ்டார் கைப்பற்றி உள்ளது. இப்படம் வரும் ஜூலை 17 முதல் ஓடிடியில் ஒளிபரப்பாகிறது. தற்போதைக்கு இதன் தெலுங்கு பதிப்பு மட்டுமே முதற்கட்டமாக வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், படம் பெற்றுள்ள மாபெரும் வெற்றியைக் கருத்தில் கொண்டு, மற்ற மொழிகளிலும் இது விரைவில் வெளியாவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.
சமந்தா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் பேனரின் கீழ் தயாரித்துள்ள இப்படத்தை ராஜ் நிடிமோரு சமந்தாவுடன் இணைந்து தயாரிக்க, நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் தற்போதும் தியேட்டர்களில் நல்ல வசூலுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டி ருக்கிறது. இது சமந்தாவின் முதல் 100 கோடி வசூல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!