
4 நாட்களில் ரூ.50 கோடி கிளப்பில் லக்கி பாஸ்கர்
நவ 04, 2024
Advertisement
வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்து சில தினங்களுக்கு முன்பு தீபாவளி பண்டிகை தினத்தன்று திரைக்கு வந்த படம் "லக்கி பாஸ்கர்". மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்திருந்தார். வங்கி பணம் மோசடி தொடர்பாக இப்படம் வெளியாகி இருந்தது. ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார். இப்படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவந்த இப்படம் தற்போது உலகளவில் நான்கு நாட்களில் ரூ. 55.4 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…