அன்பு தாய் ஐஸ்வர்யா: லால் சலாம் வெற்றியடைய ரஜினி வாழ்த்து
பிப் 09, 2024
Advertisement
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள படம், "லால் சலாம்". இந்தப் படத்தில் "மொய்தீன் பாய்" என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா சார்பில் சுபாஷ்கரன் படத்தை தயாரித்துள்ளார். படத்தை பார்த்த தணிக்கை குழு படத்திற்கு "யுஏ" சான்றிதழ் வழங்கி உள்ளது.
இப்படம் இன்று (பிப்.9) தமிழ், தெலுங்கில் தியேட்டர்களில் வெளியானது. படம் வெளியீடுக்கு ரஜினிகாந்த், ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினி வெளியிட்ட பதிவில், ""என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்"" என வாழ்த்தியுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!