
மலையாள படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த லோகேஷ் கனகராஜ்
மே 29, 2026
Advertisement
தமிழில் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள டிசி என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அவருக்கு ஜோடியாக வாமிகா கபி நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. அதையடுத்து தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் தான் இயக்கும் படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ் . இந்த நேரத்தில் மலையாளத்தில் பால் ஜார்ஜ் இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் நேற்று திரைக்கு வந்துள்ள கட்டாளான் என்ற படத்தில் லோகேஷ் கனகராஜ் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இதையடுத்து ஹீரோவாக நடிக்கும் நேரத்தில் இதுபோன்று கெஸ்ட் ரோலில் நடித்தது ஏன் என்று அவரைக் கேட்டால், இந்த சிறப்பு தோற்றம் சுவராஸ்யமாக இருந்ததால் நடித்தேன். படம் திரைக்கு வந்த பிறகு பலரும் சிறிது நேரமே தோன்றினாலும் உங்கள் கதாபாத்திரம் சிறப்பாக இருப்பதாக கூறுவது மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் லோகேஷ்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!