லட்சுமி காந்தன் கொலை வழக்கு பட தகவல்கள் திட்டமிட்டு மறைப்பு
ஜூன் 02, 2026
Advertisement
2எம் சினிமாஸ் மற்றும் டி பிக்சர்ஸ் நிறுவனங்களின் சார்பில் கே.வி. ஷபரீஷ் தயாரித்துள்ள படம் "லட்சுமி காந்தன் கொலை வழக்கு". இப்படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சாகா, மாறன், சரவணன், லிஸ்ஸி ஆண்டனி, லோகன் கண்ணன், நர்மதா, அருவி மதன், கன்யா பாரதி, கவிதா பாரதி, சுப்பிரமணியம் சிவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வருகிற 25ம் தேதி படம் வெளிவருகிறது.
படத்தின் அறிமுக விழாவில் இயக்குனர் தயாள் பத்மநாபன் பேசியதாவது : இது என் 22வது படம், மூன்றாவது தமிழ் படமும் ஆகும். இந்தப் படத்தைப் பற்றிய சில முக்கிய தகவல்களை நாங்கள் திட்டமிட்டு மறைத்துள்ளோம். அவை வெளியீட்டுக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படுத்தப்படும். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம், 1972ம் ஆண்டை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மரண தண்டனைக் கைதியின் வாழ்க்கையில் ஒரு இரவை மையமாகக் கொண்டு, அவன் கடந்த காலத்தை மீள்பார்க்கும் கதையாக இது அமைந்துள்ளது. என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!