திரில்லர் பாணியில் உருவாகும் குற்றம் கடிதல் 2
ஏப் 16, 2026
Advertisement
பிரம்மா ஜி இயக்கத்தில் 2014ல் வெளிவந்த படம் குற்றம் கடிதல். ஜேஎஸ்கே சதீஷ் குமார் தயாரிப்பில் உருவான அந்த படம் ஆசிரியர்-மாணவர் உறவை மையமாகக் கொண்ட கதையாக இருந்தது. தேசிய விருதையும் பெற்றது. 12 ஆண்டுகளுக்குபின் குற்றம் கடிதல் 2 உருவாகிறது. எஸ்.ஜே.ஜீவா இயக்குகிறார். இதில் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ் குமார் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்த பாகம் சமூக அவலங்களை பேசுகிறது.
பள்ளிக்கூட பின்னணியில் உருவானாலும் திரில்லர் பாணியில் நகர்கிறதாம். நடிகர் பாண்டியராஜன் தான் இதுவரை நடித்த கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய தோற்றத்தில் நடித்து இருக்கிறார். கொடைக்கானல் , திண்டுக்கல், நாகர்கோயில் மற்றும் சென்னையில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் முதல் பார்வை வெளயாகி உள்ளது. பள்ளிகள் திறந்ததும் வாத்தி கம்மிங் என போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். இதை வைத்து பார்க்கையில் இந்த படம் ஜுன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்தப் படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட உள்ளது.
அப்புக்குட்டி, பாலாஜி முருகதாஸ் , தீபக், பாவல், பத்மன், தேனப்பன், சாந்தினி தமிழரசன், விஜி சந்திரசேகர், லவ்லின், ஜோவிதா லிவிங்ஸ்டன் , ரோஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!