சினிமா வாழ்க்கையின் அழுத்தமான கேரக்டர் கொக்கி குமார் : தனுஷ் நெகிழ்ச்சி
மே 28, 2024
Advertisement
தனுஷை ஆக்ஷன் ஹீரோவாக உயர்த்திய படம் "புதுப்பேட்டை". செல்வராகவன் இயக்கி இந்த படம்தான் சென்னை தாதாக்கள் பற்றிய முதல் முழுமையான படம். இதில் தனுஷ் உடன் சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் தனுஷ் நடித்த "கொக்கி குமார்" கேரக்டர் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.
படம் வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தனுஷ் வெளியிட்டுள்ள பதிவில் “கொக்கி குமார் கதாபாத்திரத்துக்கு 18 வருடங்கள். ஒரு நடிகரின் சினிமா வாழ்க்கை பயணத்தில் சில கதாபாத்திரங்கள் மட்டும் அழுத்தமானதாக அமைந்துவிடும். அதுபோன்ற கதாபாத்திரம்தான் கொக்கி குமார். இந்த கதாபாத்திரத்தை கொடுத்த செல்வராகவனுக்கு நன்றி. அந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது. கொக்கி குமார் கதாபாத்திரம் ஒரு எமோஷன்"" என்று குறிப்பிட்டு உள்ளார். "புதுப்பேட்டை" படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!