
கோச்சடையான் ஏஐ ரீ-ரிலீஸ் : தடையை விலக்கிய உயர்நீதிமன்றம்
இந்த நிலையில் இந்த படம் தற்போது ஏஐ தொழில்நுட்பத்தில் சீரமைக்கப்பட்டு மறுவெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. ஆனால் தங்களது கடன் தொகை திரும்ப செலுத்தப்படாததால் இந்த படத்தின் மறுவெளியீட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என தற்போது நிதியுதவி செய்த நிறுவனம் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ் பாபு, தற்போதைய உரிமையாளரான ஈராஸ் இன்டர்நேஷனல் மீடியா நிறுவனத்திற்கு எதிராக மனுதாரர் எந்த ஒரு நிவாரணமும் கோரவில்லை என்பதால், படத்தின் மறுவெளியீட்டை தடையின்றி அனுமதிக்கலாம் என்று தீர்ப்பளித்துள்ளார். இதனால் கோச்சடையான் ரிலீஸ் சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது.




















வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்அந்த காலத்திலே இது மண்ணை கவ்வின படம்.. அவ்வளவு தைரியம் இருக்கா இந்த படத்தை மீண்டும் ரிலீஸ் பண்ண . காமெடி பண்ணாதீங்க போங்க. சூப்பர் ஸ்டார் இமேஜ் இந்த படத்தால் முன்பு டேமேஜ் மீண்டும் ரிலீஸ் பண்ணி அவருக்கு போடாதீங்க bandage