கில்லர் பட விபத்து : எஸ்.ஜே.சூர்யா நிதி உதவி
ஜூன் 06, 2026
Advertisement
இயக்குனராக வலம் வந்த எஸ்.ஜே.சூர்யா ஒருகட்டத்தில் நடிகராக மாறினார். தொடர்ந்து ஹீரோ, வில்லன் என மாறி மாறி நடித்து வந்தவர் நீண்ட இடைவெளிக்கு பின் ‛கில்லர்" என்ற படத்தை இயக்குவதோடு இதில் அவர் ஹீரோவாகவும் நடிக்கிறார். நாயகியாக பிரீத்தி அஸ்ரானி நடிக்கிறார்.
சமீபத்தில் பின்னி மில்லில் நடந்த படப்பிடிப்பில் சண்டைக்காட்சி எடுத்தபோது கேஸ் வெடித்த விபத்தில் மதன் என்பவர் மரணமடைந்தார். 3 பேர் காயம் அடைந்தனர். சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அடிபட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் ஸ்பெஷல் எபக்ட் யூனியனை சேர்ந்த சூர்யாவுக்கு காலில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மறைந்த மதன் குடும்பத்திற்கு எஸ்.ஜே.சூர்யா ரூ.10லட்சம் நிதி உதவியும், காலில் அடிபட்டு சிகிச்சை பெற்று வரும் சூர்யாவுக்கு ரூ 5 லட்சமும் நிதி உதவி அளித்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!