
ரூ.8 கோடி சம்பளம் கேட்கிறேனா : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கே.ஜி.எப் நடிகை
கே.ஜி.எப் படத்தின் வெற்றிக்குப் பிறகு நான் 7 முதல் 8 கோடி வரை சம்பளம் கேட்பதாக ஒரு வதந்தி தேவையில்லாமல் பரவியது. நான் இதுவரை மிகக் குறைவான படங்களில் மட்டுமே நடித்துள்ளேன். அப்படி இருக்கையில் என்னால் இவ்வளவு பெரிய தொகையை எப்படி சம்பளமாகக் கேட்க முடியும்? எனவே, இது முழுக்க முழுக்க ஒரு வதந்தி மட்டுமே. பணம் சம்பாதிப்பது மட்டுமே எனது நோக்கமாக இருந்தால், கடந்த சில ஆண்டுகளில் நான் 30-40 படங்களில் நடித்திருக்க முடியும். ஆனால், நான் பணத்திற்காகப் படங்களில் ஒப்பந்தம் ஆவது கிடையாது. நல்ல கதைகளுக்கும் தரமான கதாபாத்திரங்களுக்கும் தான் எப்போதும் முன்னுரிமை அளிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…