ரவி மோகன் படத்தில் இசையமைப்பாளராகும் கெனிஷா
செப் 01, 2026
Advertisement
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து அவரிடம் விவாகரத்து கேட்டுள்ளார். இந்த வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. இந்த பிரச்னைக்கு இடையே பாடகி கெனிஷா உடன் நெருக்கம் காட்டி வந்தார். இருவரும் கோவில், விழாக்கள் என ஒன்றாக சுற்றி வந்தனர். ஒருக்கட்டத்தில் அதுவும் விமர்சனத்திற்கு உள்ளாக ரவியை விட்டு நான் பிரிகிறேன் என கெனிஷா அறிவித்து சென்னையையும் காலி செய்தார். இதனால் கோபமான ரவி பத்திரிக்கையாளர்களை சந்தித்து தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.
இந்நிலையில் ரவி மோகன் ‛ஆன் ஆர்டினரி மேன்" என்ற படத்தை முதன்முறையாக இயக்கி, தயாரித்து வருகிறார். இதில் ஹீரோவாக யோகிபாபு நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வரும் சூழலில் இதில் இசையமைப்பாளராக கெனிஷா களமிறங்குகிறார். இவர் ஏற்கனவே தனியிசை ஆல்பங்களை உருவாக்கி வந்துள்ளார். அந்த அனுபவத்தில் இசையமைப்பாளராக சினிமாவில் களமிறங்குகிறார். தவிர இது ரவி மோகன் படம் என்பதாலும் கெனிஷாவிற்கு ரொம்பவே ஸ்பெஷலாக அமைந்துள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!