
யஷ் படக்குழுவிற்கு கர்நாடக வனத்துறை நோட்டீஸ்
ஜன 22, 2025
Advertisement
கேஜிஎப் படங்களின் இரண்டு பாகங்களிலும் நடித்த கன்னட நடிகர் யஷ், தற்போது மலையாள நடிகை கீது மோகன்தாஸ் இயக்கும் டாக்ஸிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் நயன்தாரா, ஹுமா குரோஷி, கியாரா அத்வானி ஆகியோர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்று வந்தது. அப்போது படப்பிடிப்பு நடத்த இடையூறாக இருந்ததாக சொல்லி படக்குழுவினர் ஏராளமான மரங்களை வெட்டி சாய்த்து உள்ளார்கள். இந்த தகவல் வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்ததும் ஆய்வு நடத்தியவர்கள் தற்போது கர்நாடக அரசு சார்பில் டாக்ஸிக் பட நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள். இதன் காரணமாக தற்போது டாக்ஸிக் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!