
டிசி படத்தை வட இந்தியாவில் வெளியிடும் கரண் ஜோஹர்
வருகிற ஆகஸ்ட் 7ம் தேதி திரைக்கு வரும் டிசி படம் கிரைம், ஆக்ஷன் திரில்லர் கதையில் உருவாகியுள்ளது. இப்படத்தின் வடஇந்திய விநியோக உரிமையை பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளராருமான கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வட இந்தியாவில் இப்படத்தை வெளியிடுவதன் மூலம், முக்கிய நகரங்களில் உள்ள திரையரங்குகளில் டிசி படத்திற்கு அதிக காட்சிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அனிருத்தின் இசையில் உருவான பாடல்கள் இசைப் பிரியர்களைக் கவர்ந்து, ரிலீஸுக்கு முந்தைய எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன. இப்படம் வருகிற வெள்ளிக்கிழமை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!