விக்ரம் ஸ்டைலை பாலோ பண்ணும் கமல்ஹாசன் - மணிரத்னம்?
ஏப் 25, 2023
Advertisement
"இந்தியன் 2" படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்க உள்ள படத்தை மணிரத்னம் இயக்கப் போகிறார். "நாயகன்" படத்திற்குப் பிறகு 36 வருடங்களுக்குப் பிறகு இருவரும் இணைய உள்ளார்கள்.
"பொன்னியின் செல்வன் 2" படத்தின் வேலைகளை மணிரத்னம் அடுத்த சில தினங்களில் முடித்துக் கொள்வார். அதற்குப் பிறகு சிறு ஓய்வெடுத்துவிட்டு கமல்ஹாசன் படத்திற்கான வேலைகளை ஆரம்பிக்க உள்ளாராம்.
மே மாதத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் "இந்தியன் 2" படத்தின் வேலைகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கடுத்து மணிரத்னம், கமல்ஹாசன் இருவரும் அவர்களது படத்திற்காக வீடியோ முன்னோட்டம் ஒன்றை முதலில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்த "விக்ரம்" படத்திற்கு அப்படி வெளியிடப்பட்ட முன்னோட்ட வீடியோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே, அதை பாலோ செய்ய கமல்ஹாசன் ஆலோசனை சொன்னதாகத் தகவல்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!