
சேயோன் படத்தில் விருமாண்டி-ஆக தொடரும் கமல்ஹாசன்
"சேயோன்" என்பது குறிஞ்சி நிலக் கடவுளான முருகரைக் குறிக்கும். "சிவந்த தலைவன்" என்பதுதான் "சேயோன்". அழகு, ஞானம், வீரம் வாய்ந்த சிவந்த நிறமுடையவன் என்பதும் அர்த்தம்.
இந்தப் படத்தில் முருகர், மற்றும் நாட்டுப் புற தெய்வமான விருமாண்டி ஆகியோரை மையப்படுத்திய ஒரு கதையாகவும் இப்படம் இருக்கும் என்கிறார்கள். "சேயோன்" ஆக சிவகார்த்திகேயன் நடிக்க "விருமாண்டி" கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
2004ம் ஆண்டு கமல்ஹாசன் எழுதி இயக்கி நடித்து வெளிவந்த படம் "விருமாண்டி". அந்தப் படம் தற்போது வரை பேசப்படும் ஒரு படமாக இருக்கிறது. கமல்ஹாசன் "சேயோன்" படத்தில் "விருமாண்டி" கதாபாத்திரத்தில் நடித்தால் அது பொருத்தமாகவும் படத்திற்குக் கூடுதல் பலமாகவும் இருக்கும் என இயக்குனர் சிவகுமார் முருசேன் கேட்டுக் கொண்டுள்ளாராம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!