
சத்யா காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல்
செப் 22, 2024
Advertisement
மலையாளத் திரையுலகத்தின் மூத்த நடிகையான கவியூர் பொன்னம்மா வயது முதிர்வு காரணமாக இரண்டு தினங்களுக்கு முன்பு கொச்சியில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு மலையாளத் திரையுலகப் பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
தமிழில் கமல்ஹாசன், அமலா நடித்த "சத்யா" படத்தில் நடித்துள்ளவர் பொன்னம்மா. அப்படத்தில் அவருடன் நடித்த காட்சி ஒன்றைப் பகிர்ந்து அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
"எல்லா நடிகர்களுக்கும் அம்மா" என்று செல்லப் பெயரெடுத்தவர் மலையாளத் திரையின் சிறந்த குணச்சித்திர நடிப்புக் கலைஞரான கவியூர் பொன்னம்மா. அவரது நடிப்புத் திறத்தால் அவரைத் தமிழ்த் திரைக்கும் (சத்யா) அழைத்து வந்தோம்.
தன் 13ம் வயதில் மேடை நாடகக் கதாநாயகியாக அறிமுகமானவரின் கலைப் பயணம், சினிமா, சீரியல், விளம்பரங்கள் என்று தொடர்ந்தது.
"அம்மா" கவியூர் பொன்னம்மா இயற்கை எய்தினார் என்ற செய்தி வருத்துகிறது. அவருடைய குடும்பத்தாருக்கு என் ஆறுதலைத் தெரிவிக்கிறேன். அன்னாருக்கென் அஞ்சலி,” என எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!