
‛சிஸ்டம் பட வெற்றிக்காக மும்பை மகாலட்சுமி கோவிலுக்கு சென்று நன்றி செலுத்திய ஜோதிகா
இந்த நிலையில் அந்த வெற்றியை உறுதிப்படுத்தும் விதமாக ஜோதிகா, படத்தின் இயக்குனர் அஸ்வினி ஐயர் திவாரியுடன் மும்பையில் உள்ள பிரபலமான மகாலட்சுமி கோவிலுக்கு சென்று வழிபட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் குறிப்பிடுகையில், "இதையெல்லாம் அவள் (தேவி) தான் நடத்துகிறாள் என்று எனக்குத் தெரியும். சிஸ்டம் படத்திற்கு தகுதியான வெற்றியை தந்ததற்காக மகாலட்சுமி தாய்க்கு நன்றி கூறி இந்த பயணத்தை நிறைவு செய்கிறோம். தேவி மகா சக்தி எப்போதும் நமக்கு ஆற்றலை வழங்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்மேடத்துக்கு தமிழ்நாட்டுக்கு கோவில்கள் என்றால்தான் பிடிக்காது. மற்ற மாநிலக் கோவில்கள் என்றால் எந்தப் பிரச்சினையும் இல்லை. தமிழகக் கோவில்களை மட்டுமே கேவலமாக பேசும் இந்த ஒட்டு மொத்தக் குடும்பம்