ஜப்பான் ரசிகர்கள் முன் நடனமாடிய ஜுனியர் என்டிஆர்
மார் 25, 2025
Advertisement
கொரட்டலா சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் "தேவரா". சுமார் 500 கோடி வசூலித்த இந்தப் படம் ஜப்பான் நாட்டில் மார்ச் 28ம் தேதி வெளியாக உள்ளது.
அதற்காக படத்தின் இயக்குனர் கொரட்டலா சிவா, ஜுனியர் என்டிஆர் ஆகியோர் ஜப்பான் நாட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு புரமோஷன் பேட்டிகளைக் கொடுத்து வருகிறார்கள். நேற்று ரசிகர்களுக்காக பிரிமீயர் காட்சி ஒன்று நடைபெற்றது. ஜப்பான் ரசிகர்கள் ஆர்வமாகப் படம் பார்க்க வந்து அரங்கை நிறைத்துள்ளார்கள்.
அப்போது சில ஜப்பான் ரசிகர்கள் மேடையில் "தேவரா" பாடலுக்கு நடனமாடினர். அவர்களுடன் இணைந்து ஜுனியர் என்டிஆரும் நடனமாடினார். அதைக் கை தட்டி, ஆரவாரத்துடன் வரவேற்றனர் ரசிகர்கள்.
"பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்" ஆகிய படங்கள் ஜப்பான் நாட்டில் நல்ல வசூலைப் பெற்றன. அதுபோல "தேவரா" படமும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…