குட் நியூஸ் சொன்ன ஜான் கொக்கன் - பூஜா
நவ 12, 2022
Advertisement
அஜித் நடித்த ‛வீரம்" படத்தில் அவரது தம்பிகளில் ஒருவராக நடித்து பிரபலமானவர் ஜான் கொக்கன். தொடர்ந்து சார்பட்டா பரம்பரை, கேஜிஎப் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய படங்களில் பிஸியாக நடித்து வரும் ஜான் கொக்கன் கடந்த 2019ல் பிரபல தொகுப்பாளினியும், நடிகையுமான பூஜா ராமச்சந்திரனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியர் சமூகவலைதளங்களில் நெருக்கமான புகைப்படங்களையும், பல்வேறு விதமான உடற்பயிற்சி செய்யும் போட்டோ, வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தனர்.
இந்நிலையில் இந்த தம்பதியருக்கு அடுத்தாண்டு குழந்தை பிறக்க உள்ளது. இதுபற்றிய தகவல்களை இருவருமே தங்களது சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். ‛‛குட்டி அதிசயம் வரவிருக்கிறது"" என தெரிவித்து பூஜா கர்ப்பமாக இருக்கும் போட்டோவை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் ஜான் கொக்கன்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!