
தங்க ஜாக்கெட் அணிந்து கவர்ந்த ஜான்வி கபூர்
சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த "பெத்தி" தெலுங்குப் படத்தில் கூட கிளாமருக்காக மட்டுமே ஜான்வி நடிக்க வைக்கப்பட்டார் என்ற சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் நடிகை அகன்ஷா ரஞ்சன் கபூர் திருமண நிகழ்வில் ஜான்வி அணிந்த தங்கத்தினால் ஆன ஜாக்கெட் மற்றும் அதற்கு மேட்சிங்கான ஸ்கர்ட், ஷால் ஆகியவை குறித்துத்தான் பெண்கள் அதிகம் பேசி வருகிறார்கள். தங்கத்தினால் ஆன அந்த ஜாக்கெட்டை மும்பையின் பிரபல டிசைனர் சுஹானி பரேக் உருவாக்கி உள்ளார்.
மாடர்ன் உடை, புடவை, பாவாடை தாவணி என எந்த ஆடை அணிந்தாலும் அது ஜான்விக்குப் பொருத்தமாக உள்ளது என்று சொல்பவர்கள்தான் அதிகம். இன்னும் தமிழ்சினிமா பக்கம்தான் வராமல் இருக்கிறார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!