
சகோதரியின் திருமணத்தில் காதலர் பெயரை சூசகமாக வெளிப்படுத்திய ஜான்வி கபூர்
இந்த நிகழ்வில் ஜான்வி கபூர் கலந்து கொண்டபோது தனது கைகளில் வரைந்திருந்த மெஹந்தியில தனது காதலரான சிகார் பகாரியாவின் பெயரை சிகு என சுருக்கமாக வரைந்திருந்தார். அவர் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்ட போது இது அனைவரின் பார்வையிலும் பளிச்சென பட்டது.
இருவரும் தங்களது காதலை இப்போது வரை வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் திருப்பதியில் சாமி தரிசனம் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் ஒன்றாக கலந்து கொண்டு வருகின்றனர். தற்போது அவருடன் காதலை உறுதிப்படுத்துவது போல தான் இப்படி மெஹந்தியில அவரது பெயரை சுருக்கமாக வரைந்து இருப்பது சுட்டிக்காட்டுகிறது என்று சொல்லலாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!