
ஜனநாயகன் முன்பதிவு குறைந்தது : வசூல் 200 கோடி கடந்தது…
இருப்பினும் விஜய்யின் முந்தைய படங்களைக் காட்டிலும் இப்படத்திற்கான வசூல் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்கிறார்கள். இந்தப் படத்தின் முதல் நாள் வசூலும் குறைவாகவே நடந்துள்ளது.
இந்நிலையில் வார இறுதி வசூலாக 200 கோடியை இந்தப் படம் கடந்துள்ளது. விஜய் நடித்து வெளிவந்த படங்களில் தொடர்ச்சியாக 200 கோடி வசூலைக் கடந்த 8வது படமாக இப்படம் அமைந்துள்ளது.
இதற்கு முன்பாக, “மெர்சல், சர்க்கார், பிகில், மாஸ்டர், பீஸ்ட், லியோ, தி கோட்” ஆகிய படங்கள் 200 கோடி வசூலைக் கடந்துள்ளன. இவற்றில் "லியோ" படம் 600 கோடி வசூலையும், "தி கோட்" படம் 400 கோடி வசூலையும் கடந்துள்ளன.
"ஜனநாயகன்" படம் 300 கோடி வசூலைக் கடக்குமா அல்லது 400 கோடி வசூலைக் கடக்குமா எனபது இந்த வார இறுதிக்குள் தெரிந்துவிடும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!