
ஜெயிலர் 2 : வில்லி காந்தாவாக வித்யாபாலன்
அறிமுக வீடியோவில் நீல நிற சேலை அணிந்து, கையில் சிகரெட்டுடன் படிக்கட்டுகளில் வித்யா பாலன் இறங்கி வருகிறார். "இங்கே வந்த பிறகு எங்கள் பேச்சைக் கேட்காமல் யாரும் வெளியேற முடியாது" என்று பஞ்ச் டயலாக் பேசுகிறார். ரஜினிக்கு எதிரான பவர்புல் கதாபாத்திரமாக காந்தா இருக்கும் என்று தெரிகிறது.
மேலும் இந்த படத்தில் மிதுன் சக்ரவர்த்தி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். முதல் பாகத்தை இயக்கிய நெல்சன் இயக்குகிறார். வரும் அக்டோபர் 15 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!