
ஜெயிலர் 2 பாடல் வெளியீடு : மலேசியாவில் நடக்கிறதா?
லேட்டஸ்ட் தகவல்படி, மலேசியாவில் ஜெயிலர் 2 பட பாடல் வெளியீட்டு விழாவை நடத்தலாம் என யோசிக்கிறார்களாம். அதற்கு சில காரணங்கள் இருக்கிறது. தமிழக முதல்வராக விஜய் வந்தது முதல் அவரை நேரில் சந்தித்து, வாழ்த்து சொல்லவில்லை ரஜினிகாந்த். முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூட சொல்லவில்லை என்று சர்ச்சை கிளம்ப, மறுநாள் நான் பேசிவிட்டேன் என்றார் ரஜினிகாந்த்.
ஜெயிலர் 2வை சென்னையில் நடத்த சிக்கல் வரலாம். சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்த அனுமதி மறுக்கப்படலாம். அதனால் உரசல் பிரச்னைகள் வரலாம் என படக்குழு நினைக்கிறது. அரசு அனுமதி மறுத்தால் அது கவுரப் பிரச்னை. அதனால், ஜனநாயகன் பாணியில் மலேசியாவில் பிரமாண்டமாக நடத்தலாம் என்று நினைக்கிறார்களாம்.
ஜனநாயகன் விழாவை பிரம்மாண்டமாக நடத்திய மலேசிய தொழிலதிபர் மாலிக், சமீபத்தில் ரஜினியை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது பாடல் வெளியீட்டு விழா குறித்து பேசப்பட்டதாக தகவல். இன்னும் சில நாட்களில் இது குறித்த அறிவிப்பு வரலாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!