
‛கட்டா குஸ்தி 2 குழுவிற்கு ஜாக்பாட் : தங்கம், வெள்ளி கார் பரிசு
கட்டா குஸ்தி 2 படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் செல்லா அய்யாவுக்கு 10 சவரன் தங்க நகையும், ஹீரோ விஷ்ணு விஷாலுக்கு 70 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ சொகுசு காரும், நாயகி உள்ளிட்ட நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு 40 கிராம் வெள்ளி நாணயத்தையும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரிசாக வழங்கினார்.
நேற்றுமுன்தினம் தான் தாய் கிழவி படத்தின் 100வது நாளில் இயக்குனர் சிவகுமார் முருகேசனுக்கு விலை உயர்ந்த எலக்ட்ரிக் காரை பரிசாக தந்தார் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!