கடவுள் கொடுத்த அழகு தான் ; எந்த சிகிச்சையும் இல்லை - மனம் திறந்த ஹனி ரோஸ்
ஜூலை 27, 2023
Advertisement
கடந்த 2005ம் ஆண்டில் வெளிவந்த பாய் பிரண்ட் என்கிற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மலையாள நடிகை ஹனி ரோஸ். தமிழிலும் "முதல் கனவே", "சிங்கம் புலி" ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தெலுங்கில் வீரசிம்ஹா ரெட்டி படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிக பிரபலமானார். இவரை இன்ஸ்டாகிராமில் 33 லட்சம் பேர் பின் தொடர்பவர்கள் உள்ளனர். ஹனி ரோஸ் அழகின் ரகசியம் அறுவை சிகிச்சைகள் தான் என்று சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து வந்தனர்.
இதுபற்றி சமீபத்தில் ஹனி ரோஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது "நான் அழகிற்காக எந்த அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளவில்லை. கடவுள் தந்த அழகை தவிர அழகைப் பராமரிக்க சில பவுடர்களை மட்டும் தான் பயன்படுத்துகிறேன். நடிகையாக சினிமா துறையில் இருப்பது எளிதானது அல்ல. நம் உடலை அழகாய் படைப்பது கடவுள் தான்" என்றார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!