
வாரணாசி பட ரிலீஸ் தள்ளிப்போகிறதா?
வாரணாசி பட வட்டாரங்களில் இருந்து ஒரு செய்தியில் வெளியிட்டுள்ளார்கள். அதில், படத்தின் வெளியீட்டு தேதியில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி வாரணாசி படம் தியேட்டருக்கு வந்து விடும். அதனால் இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று ஒரு மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளார்கள்.
மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் இப்படம் ஐமேக்ஸில் உருவாக்கப்படும் முதல் இந்திய திரைப்படமாகும். ஆஸ்கர் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்படவில்லை என்பதோடு, படப்பிடிப்பு சுமுகமாக நடைபெற்று வருவதாலும், ரசிகர்கள் இனிவரும் மாதங்களில் வாரணாசி படக்குழுவிடமிருந்து கூடுதல் அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!