
‛ஆடு 3 படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில்
மார் 13, 2026
Advertisement
மலையாளத்தில் கடந்த 2015ல் வெளியான படம் "ஆடு". ஜெயசூர்யா கதாநாயகனாக நடித்த இந்த படத்தை மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் ‛ஆடு 2" என்கிற பெயரில் கடந்த 2017ல் வெளியானது. இந்த நிலையில் 9 வருடங்கள் கழித்து தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகம் ‛ஆடு 3" என்கிற பெயரில் தயாராகி உள்ளது. மார்ச் 19ம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் இரண்டு பாகங்களிலும் நடித்த ஜெயசூர்யா, விநாயகன், விஜய் பாபு, சன்னி வெயின், சைஜூ குறூப் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் அனைவரும் இந்த மூன்றாம் பாகத்திலும் நடித்துள்ளனர். கதாநாயகிக்கு அவ்வளவாக முக்கியத்துவம் தராமல் உருவாகி இருக்கும் இந்த மூன்றாம் பாகத்தில் நடிகை நிகிலா விமல் ஒரு ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளார் என்று சமீபத்தில் சோசியல் மீடியாவில் பரபரப்பாக ஒரு தகவல் வெளியானது.
இந்த தகவல் பற்றி இயக்குனர் மிதுன் மானுவேல் தாமஸ் கூறும்போது, “நான் காலையில் தூங்கி எழுந்ததுமே இதுதான் பரபரப்பான தலைப்புச் செய்தியாக இருந்தது. என்னுடைய இயக்குனர் நண்பர்கள் கூட என்னிடம் நிகிலா விமல் இந்த படத்தில் இருக்கிறாரா என்று விசாரித்தனர். ஆனால் உண்மையில் எங்களது படத்தில் அப்படி ஒரு ஐட்டம் டான்ஸ் என்பதே இல்லை ஆனால் படத்தில் ஒரு நடன காட்சி இருக்கிறது. அதில் நிகிலா விமல் ஆடவில்லை. வேறொரு நடிகை ஆடி இருக்கிறார்” என்று விளக்கம் அளித்திருக்கிறார். தற்போது அந்த நடிகை யாராக இருக்கும் என்று ரசிகர்கள் தங்களது கவனத்தை திருப்பி உள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!