வேறு யாராவது இருந்தால் பிச்சிட்டு ஓடி இருப்பாங்க : தன்ஷிகாவை புகழ்ந்த விஷால்
ஆக 08, 2026
Advertisement
விஷால் இயக்கி, நடித்துள்ள படம் ‛மகுடம்". அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். சென்னையில் நடந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் விஷால் பேசியதாவது....
இது சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 99வது படம், என்னை 45வது இயக்குனராக அறிமுகப்படுத்துகிறார்கள். இந்த நேரத்தில் என் குருநாதர் ஆக் ஷன் கிங் அர்ஜூனுக்கு நன்றி. ஆர்.பி.சவுத்ரிக்கு ரொம்ப ரொம்ப கடமைப்பட்டிருக்கேன். ஏனென்றால் ஓராண்டு எனது தனிப்பட்ட வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது. அந்த சமயத்தில் படம் வெற்றிகரமாக வரணும் என என் கஷ்டங்களில் உடன் இருந்து என்னை ஊக்கப்படுத்தினார். அதேப்போல் என் கஷ்டங்களில் என்னை ஊக்கப்படுத்தி இவ்ளோ பாசிட்டிவாக நிற்க வைத்த என் வருங்கால மனைவி சாய் தன்ஷிகாவிற்கும் நன்றி சொல்கிறேன். வேறு யாராவது இருந்தால் இந்தநேரம் பிச்சுக்கிட்டு ஓடிருப்பாங்க
இதில் நடித்துள்ள ஜான் விஜய் எனக்கு கல்லூரியில் சீனியர். நானும், துணை முதல்வராக இருந்த உதயநிதியும் ஒரு காலத்துல கிளப் போக முடியாமல் வெளியே நிற்போம். அந்தசமயம் கேர்ள்பிரண்ட் இருந்தால் தான் உள்ளே போக முடியும். அப்போது இவரு ஒரு லூங்கி, சட்டை, கூலிங் கிளாஸ் உடன் உள்ளே போனாரு. அப்படி ஒரு ஆட்டிடியூட், இப்போ வரைக்கும் அதே ஆட்டிடியூட் வச்சுருக்காரு. அதை இந்த படத்தில் அவரை வச்சு பயன்படுத்தினேன். இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மிக்க நன்றி. நான் அவரின் தீவிர ரசிகன் அவரை பயன்படுத்தி இந்த படத்துல சின்னதா ஒரு விஷயம் பண்ணிருக்கேன்.
எந்த பிரச்னை வந்தாலும் ஸ்மைல் பண்ணுங்க. டென்ஷன் ஆகக் கூடாது. உங்கள் பாதையில் வெற்றியை நோக்கி பயணிக்கும்போது வருகிற தடையெல்லாம் தட்டிட்டு போய் கொண்டே இருக்கணும். எனக்கு அது பழக்கமாகிவிட்டது. ஆக., 14ல் படம் ரிலீஸாகிறது. உங்களிடம் சொல்ல நிறைய விஷயம் இருக்கு அதுபடம் வெற்றி பெற்ற பிறகு ஆக., 16க்கு பின் பேசுகிறேன்.
இந்த பட கிளைமாக்சில் வழக்கம் போல விஷால் வருவான், அடிப்பான், ரிவெஞ்ச் எடுப்பான் என்பது மாதிரி கிடையாது. எந்த திரைப்படத்துலயும் பார்க்காத ஒரு கிளைமாக்ஸை பார்க்க போறீங்க. எனக்கு பிடித்த நடிகர் விஜய். அவர் இன்றைக்கு நல்லா இருக்காரு. ஒரு ரசிகராக நான் எப்படி ரோகிணி தியேட்டரில் அவர் படத்தை பார்த்து ரசித்தேனோ, அதே தியேட்டரில் என் படக்காட்சிக்கு எப்படி ரசிகர்கள் கைதட்டப் போறாங்கானு பார்க்க ஆவலாய் உள்ளேன்.
இந்த படத்தில் ஒரு மிகப்பெரிய தூணாக இருந்தது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். அவருக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. ஈகோ அல்லாத ஒரு இசையமைப்பாளர். ராம் கோபால் வர்மாவின் உதயம், சிவா படங்களை பார்த்து இயக்குனர் ஆக நினைத்தேன். இன்றைக்கு அது நனவாகி உள்ளது.
சினிமா என்றில்லை முயற்சி செய்து உழைத்தால் எந்த துறையாக இருந்தாலும் ஜெயிக்கலாம். நிறைய பெற்றோர் சினிமா வேண்டாம் என்று சொல்லுவாங்க. ஆனால் என் அம்மா எனக்கு ஆதவராக இருந்தார். முக்கியமாக சண்டக்கோழி படம் வர காரணமே அவர் தான். என் அப்பா, அம்மா தந்த நம்பிக்கை தான் 35 வருஷம் கழித்து என் கனவு நனவாகி இயக்குனராகி உள்ளேன்.
இவ்வாறு விஷால் பேசினார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!