
ஜல்லிக்கட்டு, மாடுபிடி வீரர்களை தவறாக சித்தரிக்க அனுமதிக்க மாட்டேன் : சசிகுமார்
இந்த சீரிஸில் முடக்கத்தான் மணி என்ற கதாபாத்திரம் தவறாக காட்டப்பட்டுள்ளதாக கூறி வெப் சீரிஸிற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த பிரபல மாடுபிடி வீரரும், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையத்தின் தலைவரான முடக்கத்தான் மணி, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் மணியை நேரில் சந்தித்து பேசினார் நடிகர் சசிகுமார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‛‛வதந்தி படத்தில் முடக்கத்தான் மணி என்ற பெயரை தவறாக சித்தரிக்கவில்லை. நான் காரி படத்தில் நடித்தேன். மதுரைக்காரனாக ஜல்லிக்கட்டு பற்றி தெரியும். மணி என்ற பெயரை வைத்திருக்க கூடியவர்கள் இந்த சீரிஸை பார்த்தால் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள். அந்த பெயர் வைத்துள்ள அனைவரும் ஏற்றுக் கொள்ளும் படமாக இருக்கும். ஜல்லிக்கட்டையோ மாடுபிடி வீரர்களை தவறாக சித்தரிக்க நானும் அனுமதிக்க மாட்டேன்"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!