இனி மகனுக்காக வாழ்வேன் : மாதம்பட்டி ரங்கராஜின் மனமாற்றம்
ஜூலை 31, 20261
Advertisement
சினிமா நடிகரும், சமயற்கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்டில்லா ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி ஒரு குழந்தைக்கு தாயாக்கிவிட்டு தன்னை கைவிட்டு விட்டதாக புகார் அளித்தார். இதனை மாதம்பட்டி ரங்கராஜ் மறுத்தார். இது தொடர்பாக கிறிஸ்டில்லா தொடர்ந்த வழக்கில் ரங்கராஜுக்கு மரபணு சோதனை செய்யப்பட்டு ஜாய் கிறிஸ்டில்லாவின் குழந்தைக்கு ரங்கராஜ் தான் தந்தை என்று உறுதி செய்யப்பட்டது.
தற்போது தனது மகன் ராகா ரங்கராஜை மகனாக முழுமனதுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறார் ரங்கராஜ். தனது மகனோடு இருக்கும் படத்தை வெளியிட்டு அவர் வெளியிட்டுள்ள பதிவில் “என் மகன் ராகாவிற்கு, ஒரு தந்தையாக செய்ய வேண்டிய அனைத்தையும் கடந்த 6 மாதங்களாக முழுபொறுப்புடனும் அன்புடனும் செய்து வருகிறேன். இனி என் வாழ்நாள் முழுவதும் ராகா ரங்கராஜின் நலன், மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்திற்காக முழுப்பொறுப்புடனும், அன்புடனும் துணை நிற்பேன் என்பதை அதிகாரப்பூர்வர்மாக தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுட் ள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்நல்ல செய்தி எங்கே இந்தியா வல்லரசு ஆகாமல் போய் விடுமோ என்ற கவலை தீர்ந்தது