எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு
மே 02, 2024
தனது தாயார் பெயரிலும், ராகவேந்தர் பெயரிலும் அறக்கட்டளை நடத்தி வரும் ராகவா லாரன்ஸ் தற்போது "சேவையே கடவுள்" என்ற பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றை தொடங்கி உள்ளார். இதில் நடிகர், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்துள்ளார். இவர்களுடன் கலக்கப்போவது பாலா, செப் வினோத், அறந்தாங்கி நிஷா இணைந்து செயல்படவுள்ளனர்.
இந்த அறக்கட்டளை மூலம், முதற்கட்டமாக விவசாயிகளுக்கு பயன்படும் வகையில், 10 டிராக்டர், 10 ஊர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த ஊர்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் பயன்பாட்டுக்கு இந்த டிராக்டரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த விழாவில் ராகவா லாரன்ஸ் பேசியதாவது: 2 மாதம் முன்பு எனக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. கோவிலுக்கு போய் வந்த நாள், ஒரு கனவு அதை நினைத்து கண்களில் தானாக கண்ணீர் வந்தது. அதுதான் இந்த மாற்றத்தின் துவக்கம். நான் அதைச் செய்யப் போகிறேன். இதைச் செய்யப்போகிறேன் என சொல்ல மாட்டேன், செய்துவிட்டு சொல்கிறேன்.
எஸ்.ஜே.சூர்யா சினிமாவில் மட்டுமல்ல இந்த பணியிலும் என்னுடன் இணைந்துள்ளார். இது கடவுளின் ஆசிர்வாதம். இணைந்து பயணிப்போம். என்னை இந்தளவு வளர்த்தெடுத்தது என் தாய் தான். சின்ன வயதில் என் அம்மா, என்னை எம் ஜி ஆர் மாதிரி வளர்ப்பேன் என்றார். அப்போது எல்லோரும் சிரித்தார்கள். ஆனால் எம் ஜி ஆர் அளவு இல்லையென்றாலும் அவரில் சிறியளவிலாவது நான் செயல்படுவேன். என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!