22 ஆண்டுகள் போதைக்குள் இருந்தேன் : பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா
ஆக 28, 2026
Advertisement
அமெரிக்காவில் பணியாற்றும் டி.ஆண்டனி இயக்கி, தயாரித்து, கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "ஏன் என்னை ஏதோ செய்தாய்". இதில் வங்காள நடிகை மதுமிதா தாஸ் ஹீரோயின். கார்த்திக் நேத்தா பாடல்களை எழுதி, இசையமைத்துள்ளார். செப்டம்பர் 4ல் ரிலீஸாகிறது.
பட விழாவில் கார்த்திக் நேத்தா பேசியது, ‛‛சமூகத்தில் போதை என்பது நம்மை என்ன என்ன வகையில் ஆட்டிப்படைக்கிறது என்பதை கதையில் சொல்லி இருக்கிறார்கள். நம்மை சுற்றி நிறைய போதைகள் சூழ்ந்து இருக்கிறது. ஏன் செல்லில் ரீல்ஸ் பார்க்கிறது கூட ஒரு போதைதான். நமக்கு தெரியாத போதைகள் உண்டு. அதையும் இந்த படத்தை பார்த்த பிறகு தெரிந்து கொள்ளலாம். புறத்தில் இருப்பது மட்டும் போதையல்ல. அகத்துக்குள் போதையை நோக்கி தள்ளக்கூடிய போதையும் நிறைய இருக்கிறது.
விரைவில் போதை குறித்து புத்தகத்தை நான் எழுதுவேன். எனக்கு அந்த தகுதி உண்டு. என் வாழ்க்கையில் 22 ஆண்டுகள் போதைக்குள் இருந்தவன். ஆனால் ஏன் போதைக்குள் நாம் போனோம் என சிந்திப்பதற்கான வாய்ப்பை அன்பு மட்டும் தான் நமக்கு வழங்கும். இந்தபடம் மக்களிடம் போய் சேரும். மக்கள் இதை பார்க்கணும் என்பதற்கு ஒரே ஒரு காரணம், நாம் அத்தனை பேரும் போதை வயப்பட்டிருக்கிறோம், ஆழ் மனதிற்குள் நாம் மயக்கத்தை நோக்கியே போய் கொண்டிருக்கிறோம். அது ஏன்? எதற்கு? என்பது இந்த படத்தில் காரணம் சொல்லப்பட்டுள்ளது"".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!