ஆங்கிலம் தெரியாததால் நைஜீரியாவில் அவமானப்படுத்தப்பட்டேன் : பாக்யஸ்ரீ போர்ஸ்
ஜூலை 17, 2026
Advertisement
துல்கர் சல்மான் நடித்த "காந்தா" திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ். தற்போது சிவகார்த்திகேயனுடன் "சேயோன்" படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் அகில் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள "லெனின்" திரைப்படத்திலும் இவர்தான் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தாலும், மகாராஷ்டிராவைப் பூர்வீகமாகக் கொண்டவர். சமீபத்திய பேட்டி ஒன்றில், ஆங்கிலம் தெரியாததால் நைஜீரியாவில் பள்ளிப் பருவத்தில் தான் எவ்வளவு அவமானப்படுத்தப்பட்டேன் என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, "எனது தந்தைக்கு நைஜீரியாவில் வேலை கிடைத்ததால் குடும்பத்துடன் அங்கு குடிபெயர்ந்தோம். அப்போது எனக்கு ஆங்கிலம் சுத்தமாகத் தெரியாது. அந்த சமயத்தில் அங்குள்ள பள்ளியில் இந்திய வம்சாவளி மாணவர்கள், எனக்கு ஆங்கிலம் தெரியாததைக் கண்டு "எப்படி ஒருவருக்கு ஆங்கிலம் தெரியாமல் இருக்கும்" என்று மட்டம் தட்டி கேலி செய்தனர். இது என்னை காயப்படுத்தினாலும், இந்த வலியை ஒரு பாடமாக மாற்றிக்கொண்டு தீவிரமாக ஆங்கிலம் கற்றுக் கொண்டேன். இன்று நான் சரளமாக ஆங்கிலம் பேசுவதற்கு அந்த ஆரம்ப கால வலிகளே காரணம்" என்று கூறியுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!