
கேமராவுக்கு பின்னால் எனக்கு நடிக்க தெரியவில்லை : மீனாட்சி சவுத்ரி
மே 14, 2026
Advertisement
தமிழில் கொலை, சிங்கப்பூர் சலூன், கோட் ஆகிய படங்களில் நடித்தவர் மீனாட்சி சவுத்ரி. தற்போது தெலுங்கு, ஹிந்தியில் பல படங்களை நடித்து வருகிறார் . அவர் கூறுகையில், ‛‛என்னை பொறுத்தவரை கேமராவுக்கு முன்பு இயக்குனர்கள் என்ன சொல்கிறார்களோ, அதன்படி நடித்து வருகிறேன். இப்படி கேமராவுக்கு முன்பு நடிக்கும் நான் கேமராவுக்கு பின்னால் ஒரு போதும் நடித்ததில்லை. அனைவரிடத்திலும் ஒளிவு மறைவு இல்லாமல் பேசுவேன். இப்படி பேசியதால் பல விமர்சனங்களிலும் சிக்கி இருக்கிறேன். அப்படி நான் பேசும் விஷயங்களை ஊடகங்கள் திரித்து எழுதி என்னை சர்ச்சைகளிலும் சிக்க வைத்துள்ளார்கள். என்றாலும் எனது இயல்பு தன்மையை என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. என் சுபாவம் அப்படியாகி விட்டது"" என்கிறார் மீனாட்சி சவுத்ரி .
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!