நான் வாடகை வீட்டில் இருக்கிறேன் : ரவி மோகன் உருக்கம்
ஜூன் 27, 2025
Advertisement
‛எட்டு தோட்டாக்கள்" புகழ் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத் நடித்துள்ள படம் ‛3bhk". இதன் பாடல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நடிகர் ரவி மோகன் பேசியதாவது...
இந்த படத்தை நான் பார்த்துவிட்டேன். பொதுவாக ஒரு ஹீரோ படத்தை மற்ற ஹீரோவுக்கு காண்பிக்க மாட்டார்கள். நானும் சித்தார்த்தும் நண்பர்கள். அவர் தெலுங்கில் நடித்த பொம்மரிலுவின் தமிழ் ரீமேக்கில் நான் நடித்தேன். இன்னமும் நாங்கள் நண்பர்கள். அவர் தவறான படங்களில் நடித்தது இல்லை. நான் கோமாளி படத்தில் ஸ்கூல் ரோலில் நடித்துவிட்டேன். இதில் சித்தார்த் பள்ளி மாணவராக நடித்துள்ளார். அப்படி நடிப்பது கஷ்டம்.
நான் குட் நைட் படம் பார்த்தேன். அதில் மீதா சிறப்பாக நடித்தார். இந்த படத்தில் அவர் இருக்கிறார். இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் சிறப்பான இசை கொடுத்து இருக்கிறார். சரத்குமார், தேவயானியும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். நானும் தேவயானி மேடமும் ஜீனி படத்தில் நடித்து இருக்கிறோம். இந்த படம் சொந்த வீடு கனவு பற்றி பேசுகிறது. நான் வாடகை வீட்டில் இருந்தது இல்லை. சின்ன வயதில் இருந்தே சொந்த வீடுதான். ஆனால் இப்போது வாடகை வீட்டில் வசிக்கிறேன்"" என உருக்கமாக பேசினார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!