நான் சாய் பல்லவியின் மிகப் பெரிய ரசிகன் - கரண் ஜோஹர்
ஜூன் 08, 2022
Advertisement
பாலிவுட்டின் முக்கியமான இயக்குனர்களில் கரண் ஜோஹரும் ஒருவர். அவரது இயக்கத்தில் வெளிவந்த சில படங்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்துள்ளன. அவர் ஒரு தமிழ் நடிகையின் தீவிர ரசிகன் என்பதை இப்போது தான் சொல்லியிருக்கிறார்.
ராணா டகுபட்டி, சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள தெலுங்குப் படமான "விராட பர்வம்" படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அந்த டிரைலரைப் பார்த்துவிட்டுத்தான் கரண் ஜோஹர் இப்படி தெரிவித்துள்ளார்.
“இது மிகவும் அற்புதமாக உள்ளது ராணா. பார்க்கக் காத்திருக்கிறேன். நீங்கள் சூப்பராக இருக்கிறீர்கள். சாய் பல்லவியின் மிகப் பெரிய ரசிகன் நான்,” எனக் குறிப்பிட்டுள்ளார். கரணின் பாராட்டுக்கு, “நீங்கள் மிகவும் அன்பாவனர் சார், தாழ்மையுடன் மிக்க நன்றி,” என சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
1990களில் நக்சலைட்களின் பின்னணியில் படமாக்கப்பட்டுள்ள "விராட பர்வம்" படம் ஜுன் 17ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. பிரியாமணி, நந்திதா தாஸ், நவீன் சந்திரா, ஈஸ்வரி ராவ் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!