பிரபுதேவா படத்தில் இணைந்த தனுஷின் விஐபி தம்பி
மார் 16, 2022
Advertisement
பிரபுதேவா தற்போது ரேக்ளா என்கிற படத்தில் நடித்து வருகிறார். சிபிராஜ் நடித்த வால்டர் என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் அன்பு இந்த படத்தை இயக்கி வருகிறார் ஜிப்ரான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்தப்படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் மிஷ்கின் துவங்கி வைத்தார். இந்தப்படத்தில் ரேக்ளா பந்தயத்திற்கு பயன்படும் மாடுகளை பராமரிப்பவர் நடிக்கிறார் பிரபுதேவா. கதாநாயகியாக வாணி போஜன் நடிக்கிறார்.
சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் தற்போது முக்கியமான வேடத்தில் நடிகர் ரிஷிகேஷ் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் இவர் வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷின் தம்பியாக நடித்தவர். இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ரிஷிகேஷ் ரேக்ளா படப்பிடிப்பில் பிரபுதேவா மாஸ்டருடன் இணைந்துள்ளேன் ஆட்டம் ஆரம்பம் என்று கூறியுள்ளார். அவரை இயக்குனர் அன்பு, வாருங்கள் சகோதரரே என வரவேற்றுள்ளார்

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!