இதயம் முரளி : தியேட்டர்களில் இல்லாத படத்துக்கு 50வது நாள் போஸ்டர்
ஆக 29, 2026
Advertisement
புதிய படங்கள் வெளியாகி அவை தியேட்டர்களில் ஓடினால் மட்டும்தான் 25வது நாள், 50வது நாள் என போஸ்டர்களை வெளியிடுவார்கள், சுவர்களில் ஒட்டுவார்கள். ஆனால், இந்த சமூக வலைத்தள காலத்தில் தியேட்டர்களில் ஓடாத படங்களுக்குக் கூட 50வது நாள் போஸ்டர்களை வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆகாஸ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா, ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி, தமன், ஆகியோருடன் சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் நடிக்க கடந்த ஜூலை மாதம் 10ம் தேதி வெளியான படம் "இதயம் முரளி". விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெறாத ஒரு படம். ஆனால், படத்திற்காக சக்ஸஸ் மீட் கூட நடத்தினார்கள். இப்படம் சக்ஸஸ் படம் என அதை வெளியிட்ட ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கூட ஒரு போஸ்டரை வெளியிட்டது.
இப்படம் ஓடிடி தளத்தில் கூட இரண்டு வாரங்களுக்கு முன்பே வெளியாகிவிட்டது. இன்று இப்படத்திற்காக 50வது நாள் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். ஆன்லைன் இணையதங்களில் போய் தேடிப் பார்த்தாலும், கூகுள், ஏஐ என இணையதளங்களில் தேடினாலும் படம் தியேட்டரை விட்டு தூக்கப்பட்டுவிட்டது என்றுதான் பதில் வருகிறது. அப்படியென்றால் எதற்காக இந்த 50வது நாள் போஸ்டர் ?.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!