ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார்
நவ 05, 2025
Advertisement
ஹாலிவுட்டில் வெளியான "சைனா டவுன்", "கோஸ் ஆப் மிஸிஸிப்பி", "பிரைமரி கலர்ஸ்", "28 டேஸ்", உள்பட 100க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களிலும், ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தவர் டயான் லாட்.
"ஆலிஸ் டஸ் நாட்ன்லிவ் ஹியர் எனிமோர்", "வைல்ட் அட் ஹார்ட்", "ராம்ப்ளிங் ரோஸ்" ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக மூன்று முறை ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். இவர் மகள் லாரா டெர்னும் பிரபல நடிகை ஆவார். "ஒயிட் லைட்னிங்", "வைல்ட் அட் ஹார்ட்", "சிட்டிசன் ரூத்", "டாடி அண்ட் தெம்" போன்ற சில படங்களில் இருவரும் தாய்- மகளாக நடித்தனர்.
1950 முதல் நடித்து வந்த டயான் லாட் வயது மூப்பு காரணமாக சினிமாவில் இருந்து விலகி கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். 89 வயதான டயான் இரண்டு நாட்களுக்கு முன்பு காலமானார். இதை அவர் மகள் லாரா டெர்ன் உறுதிப்படுத்தி, அஞ்சலியையும் வெளியிட்டுள்ளார். அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!