சரித்திர சாதனை : விஜய் வெற்றி குறித்து தந்தை எஸ்ஏ சந்திரசேகர் பெருமிதம்
மே 04, 2026
Advertisement
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத ஒரு வரலாற்று வெற்றியை தனது முதல் தேர்தலிலேயே பதிவு செய்துள்ளார் நடிகரும், தவெக தலைவருமான விஜய். அவரது கட்சி 100க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பெரும்பான்னைக்கு இன்னும் சில சீட்டுகளே உள்ளன. அவை கிடைத்துவிட்டால் ஆட்சியை யார் தயவுமின்றி பிடித்துவிடுவார். ஒருவேளை பெரும்பான்மை கிடைக்காவிட்டால் மற்ற கட்சிகளை இணைத்தாவது ஆட்சி கட்டிலில் அமருவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜய்க்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பேட்டியில், ‛‛ஒரு தந்தையாக, நான் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். என் மகனுக்கு நல்வாழ்த்துகள். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவரது தன்னம்பிக்கையும், தான் தமிழகத்தில் முதலமைச்சராக வருவேன் என்ற அவரது நம்பிக்கையும் சிறப்பாக அமைந்திருந்தன. அந்த மனப்பான்மையை நான் பெரிதும் பாராட்டுகிறேன். ஒரு தலைவனாக, எந்தக் கூட்டணியும் இன்றித் தான் தனித்து நின்று சாதிப்பேன் என்ற அவரது துணிச்சல் போற்றுதலுக்குரியது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி; விஜயைப் பொறுத்தவரை இது ஒரு சரித்திரச் சாதனையாகும் என்று நான் கருதுகிறேன்"" என தெரிவித்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!