நூறு ஸ்ரேயா கோஷல்களை தூக்கி சாப்பிட்டு விடுவார் : பாடகி தீ குறித்து சின்மயி புகழாரம்
ஜூன் 03, 2025
Advertisement
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் இசைப்பட்டறையில் இருந்து உருவானவர் தான் வளர்ந்து வரும் பிரபல பின்னணி பாடகி தீ. இவரது பாடலுக்கு என மிகப் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த வகையில் விரைவில் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக இருக்கும் தக் லைப் திரைப்படத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.
சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற போது, மேடையில் இந்த பாடலை சின்மயி பாடினார். கடந்த சில வருடங்களாக சின்மயி தமிழில் பாட மறைமுக தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் இந்த பாடலை பாடியதும் பலரும் ஏற்கனவே இந்தப் பாடலை பாடிய "தீ"யின் குரலையும் சின்மயியின் குரலையும் ஒப்பிட்டு சின்மயிக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவிக்க துவங்கினர். இது தேவையில்லாத ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து சமீபத்தில் பேசியுள்ள சின்மயி, “அன்றைய தினம் "தீ" இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அது மட்டுமல்ல இந்த பாடலை ஏற்கனவே தெலுங்கிலும் ஹிந்தியில் நான் பாடி இருந்ததால் "தீ"க்கு ஒரு மாற்றாக தான் இந்த பாடலை நான் மேடையில் பாட வேண்டிய சூழல் வந்தது. ஆனால் பலரும் தேவையில்லாமல் எங்கள் இருவரையும் ஒப்பிட்டு பேசுவது வருத்தத்தை அளிக்கிறது. அவர் இப்போதுதான் நன்றாக வளர்ந்து வரக்கூடிய பாடகியாக இருக்கிறார். என்னுடைய 16 அல்லது 18 வயதில் இப்படி என்னை பாட சொல்லி இருந்தால் நான் நிச்சயமாக என்னால் முடிந்திருக்காது. "தீ"யைப் பொறுத்தவரை அவர் 100 சின்மயி இல்லை, 100 ஸ்ரேயா கோஷல்களை தூக்கி சாப்பிட்டுவிட்டு விடுவார். அந்த அளவிற்கு திறமையானவர்” என்று தனது வருத்தத்தை தெரிவித்ததுடன், அவரை சிலாகித்து பாராட்டியும் உள்ளார் சின்மயி.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…