கப்பாலி படத்திலிருந்து ஹன்சிகாவின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு
ஆக 10, 2026
Advertisement
தெலுங்கில் நாரா ரோஹித் நடிப்பில் வரவிருக்கும் சைக்காலஜிக்கல் ஹாரர் த்ரில்லர் படம் கப்பாலி. இதில் ஹன்சிகாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இன்று ஹன்சிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் ஹன்சிகா கருப்பு-வெள்ளை கைவண்ண ஓவிய பாணியில் மெல்லிய சங்கிலியுடன் கூடிய அவரது எளிமையான தோற்றம் உள்ளது. ராம் கன்னி இயக்கத்தில் உருவாகும் கபாலி படம், காவல் துறை பின்னணியில் சைக்காலஜிக்கல் படமாக தயாராகிறது.
மேலும், இந்த போஸ்டரில் ஹன்சிகாவின் உருவப்படத்துடன் இருண்ட, மூடுபனி நிறைந்த காடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அவரைச் சுற்றி விசித்திரமான குறியீடுகளும் அடையாளங்களும் காணப்படுகின்றன. பின்னணியில் மரங்களின் வழியே சூரிய ஒளி ஊடுருவுகிறது. அடர்ந்த காட்டிற்குள் தனியாக நடந்து செல்லும் ஒரு உருவம், படத்தின் மீதான சுவாரஸ்யத்தையும் மர்மத்தையும் மேலும் உயர்த்துகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!