
சார்-ல் இணைந்து பாடிய ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி
ஜூலை 05, 2024
Advertisement
தமிழ் சினிமாவில் உள்ள நட்சத்திர தம்பதியர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், பாடகி சைந்தவி. காதலித்து திருமணம் செய்த இவர்கள் சமீபத்தில் பிரிவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தனர். இவர்கள் இணைந்து பல படங்களில் பாடி உள்ளனர். அந்த பாடல்கள் எல்லாம் ஹிட்டாக அமைந்துள்ளன. இந்நிலையில் நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல், சாயாதேவி இணைந்து நடித்திருக்கும் படம் சார். இந்த படத்திற்கு சித்து இசையமைத்திருக்கிறார். அவரது இசையில் உருவாகியுள்ள பனங்கருக்கா என்ற முதல் சிங்கிள் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி ஆகிய இருவரும் இணைந்து பின்னணி பாடி இருக்கிறார்கள். விவேகா எழுதியுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!