
சந்தானத்தின் குலு குலு பர்ஸ்ட் லுக் வெளியீடு : ஜூனில் ரிலீஸ்
மே 11, 2022
Advertisement
நடிகர் சந்தானம் நடிப்பில் இயக்குனர் ரத்னகுமார் இயக்கியுள்ள படம் "குலு குலு". அதுல்யா சந்திரா நாயகியாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் நமிதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, "லொள்ளு சபா" மாறன், சேசு ஆகியோயர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஊர் ஊராக சுற்றும் தேசாந்திரியாய் சந்தானம் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வரும் நிலையில் அடுத்த மாதம்(ஜூன்) தியேட்டரில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!