
ஹைதராபாத் ஹோட்டல் இடிப்புக்கு வருத்தப்படும் ஜெனிலியா
ஹைதராபாத்தில் சினிமா பிரபலங்களின் வீடுகள் அதிகம் இருக்கும் பஞ்சாரா ஹில்ஸ், பஞ்சாரா ஏரி பகுதியில் "தாஜ் பஞ்சாரா" என்ற ஒரு நட்சத்திர ஹோட்டல் இருந்தது. 2023ல் லீஸ் முடிந்ததன் காரணமாக அந்த ஹோட்டல் மூடப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களாக சொத்துவரியாக 1 கோடியே 43 லட்சம் கட்டவில்லை என ஹைதராபாத் மாநகராட்சி அந்த ஹோட்டலுக்கு சீல் வைத்தது.
அந்த இடத்தை சுமார் 300 கோடி கொடுத்து ஒரு தனியார் கட்டுமான நிறுவனம் வாங்கியுள்ளது. அங்கிருந்த அந்த ஹோட்டல் தற்போது இடிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் கடைசியில் ஆரம்பமான இடிக்கும் வேலை இன்னும் நான்கு மாதங்கள் நடக்க உள்ளது. அந்த இடத்தில் 40 அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று வர உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ், தெலுங்கில் நடித்துள்ள ஜெனிலியா அந்த ஹோட்டல் இடிப்பு குறித்து, “பல பல வருடங்களாக எனது வீடாக இருந்தது” என குறிப்பிட்டு தன் வருத்தத்தை பதிவிட்டுள்ளார். ஒரு ஹோட்டல் இடிப்பிற்காக ஜெனிலியா இப்படி பதிவிட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!