
பிளாஷ்பேக்: சீரியஸ் கதையை சிரிப்பு கதையாக மாற்றிய விசு
பொதுவாக ரீமேக் படத்தை விரும்பாத விசு வேறு யாராவது இயக்கட்டும் நான் நடித்து தருகிறேன் என்று சொன்னார். அதன்படி டி.எஸ்.பாலகன் என்ற புதுமுகம் படத்தை இயக்க நியமிக்கப்பட்டார். புதுமுகம் இயக்கினாலும் படத்தை உண்மையில் இயக்கியது விசு தான். மலையாளத்தில் வெளிவந்த "காரியம் நிசாரம்" கொஞ்சம் சீரியசான கதை, அந்த கதையை காமெடி கதையாக மாற்றினார் விசு. கூடவே தனது சகோதரர் கிஷ்முவிற்கென்று தனி போஷனை உருவாக்கி நடிக்க வைத்தார். கிஷ்முவின் காமெடி பேசப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. மாப்பிள்ளை சார் என்ற பெயரில் வெளியானது.
மலையாளத்தில் பிரேம் நசீர் நடித்த கேரக்டரில் விசுவும், பாலச்சந்திரமேனன் நடித்த கேரக்டரில் மோகனும், லட்சுமி நடித்த கேரக்டரில் ஜெயந்தியும், பூர்ணிமா நடித்த கேரக்டரில் ரேகாவும் நடித்தார்கள்.
விசு ஒரு வழக்கிறிஞர் மாமனாருக்கு கொடுத்த வாக்குப்படி தனது வேலையை விட்டு விட்டு மனைவிக்கு சேவகம் செய்கிறார். அவருக்கு 2 மகள்கள். இருவரும் காதலித்து திருமணத்திற்காக வீட்டில் அனுமதி கேட்கும்போது அம்மா அனுமதி மறுக்கிறார். அப்பா விசு எப்படியெல்லாம் டிராமா போட்டு மகள்கள் திருமணத்தை நடத்துகிறார் என்பதுதான் கதை.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!